வால்பாறையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறையில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நகர்ப்புற நல்வாழ்வு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.



மேலும், பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்பொழுது கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் வாழைத்தோட்ட பகுதியில் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையமும் திறக்கப்பட்டது.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையம் பொது மக்களின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...