திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

திருப்பூர் கோர்ட் வீதியில் வெறிநாய்க்கடியால் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொடர் சிகிச்சையில் உள்ள சிறுவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு அங்கு தெரு நாய் கடித்ததில் மூன்று சிறுவர், சிறுமியர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதில் பெரியவர்கள் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மூன்று சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



அவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 



பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து மருத்துவர்களிடம் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் மூன்று தெருநாய்களை பிடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...