கோவை வேளாண் பல்கலையில் பட்டயப்படிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டயப்படிப்புகள்‌.

இந்த கல்வியாண்டில்‌ வேளாண்மை (ஆங்கில வழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு வருகின்றன.

மாணவர்கள்‌ தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான கடைசி தேதி 09.06.2023 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இணையதளம்‌ மூலமாக பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்‌ கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்‌ என்ற கோரிக்கை பெற்றோர்‌ மற்றும்‌ பொதுமக்களிடம் இருந்து தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ பெறப்பட்டு வருகிறது.

ஆகையினால்‌ வேளாண்மை (ஆங்கிலவழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம்‌ மூலமாக விண்ணப்பித்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி 01.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள்‌ தங்களின்‌ விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ . விண்ணப்பதார்கள்‌ www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 0422-6611345, 0422-6611346, 9488635077, 9486425076 என்ற தொலைபேசி உதவிச்‌ சேவை எண்களிலும்‌ [email protected] என்ற மின்னஞ்சல்‌ மூலமாகவும்‌ வார நாட்களில்‌ காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்து கொள்ளலாம்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...