கோவையில் புகையிலை விற்பனை குறித்து சுகாதாரத்துறை திடீர் சோதனை!

மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம் மற்றும் சீரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில், கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் புகையிலை விற்பனை குறித்து நடைபெற்ற திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சுகாதார துறை சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில் பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மூலம் மலுமிச்சம்பட்டி, ஒத்தக் கால்மண்டபம், சீரபாளையம் பகுதியில் திடீர் சோதனை நடைபெற்றது. 

இதில் நேர்முக உதவியாளர் குமார் மாவட்ட ஆலோசகர் சரண்யாதேவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிராஜன் சமூக பணியாளர் முரளி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கும், பேக்கரி, கடை உரிமையாளர் ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...