திருப்பூரில் மக்கள் நீதிமன்றம் - 323 வழக்குகளுக்கு தீர்வு!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் 1625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் இழப்பீடாக பெற்று தரப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. 



திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமையேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். 

ஏழு அமர்வுகளாக நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1625 வழக்கில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்புள்ள இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...