டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - உலக அளவில் முதலிடத்தில் இந்தியா!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான உலக தரவரிசை பட்டியலில் இந்தியா 8.95 கோடி பணப்பரிவர்த்தனையுடன் மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் சீனாவும், 4வது இடத்தில் தாய்லாந்தும், 5வது இடத்தில் தென் கொரியாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

டெல்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக அளவிலான தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த உலகத் தரவரிசை பட்டியலில்  8.95 கோடி பணப்பரிவர்த்தனை என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 29.2 மில்லியன் பரிவர்த்தனைகள் என்ற கணக்கில் பிரேசில் 2 ஆவது இடத்தையும், 17.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், 16.5 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் 4வது இடத்தில் தாய்லாந்து உள்ளது, அடுத்ததாக  8 மில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுடன் தென் கொரியா 5வது இடத்தில் உள்ளது .

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் சூழலில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...