கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள் - இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகளையும் வழங்கி வரவேற்றனர்.



கோவை: கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வெயிலின் தாக்கத்தால் 6 முதல் 12 வகுப்பு வரை பனிரெண்டாம் தேதி பள்ளிகள் செயல்படும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 



மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். 

அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 88 பள்ளிகள் உள்ளன. இதில் நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 



இன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் வருகை தந்த நிலையில் பள்ளியில் குழந்தைகளை வரவேற்கும் வண்ணமாக இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து கொடுத்தும் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...