திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் - பரபரப்பு!

திருப்பூர் குமரன் சாலையில் சாலையை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் அமைத்திருந்த விளம்பரப் பலகைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், அதனை அகற்ற அவகாசம் கொடுத்தும் அகற்றாததால், நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

திருப்பூர் குமரன் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே அவற்றை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததன் காரணமாக இன்று மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.



அப்புறப்படுத்தும் பணியின் போது, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது வணிகர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...