கோவை அருகே பெண்ணிடம் 10.5 சவரன் நகை பறிப்பு - இளைஞர் கைது!

கோவை பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பொன்மணி (57) என்பவரது கடைக்கு வந்த நபர் பொருட்கள் வாங்குவது போல், பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்து சென்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் உரிமையாளரின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்துச் செல்ல முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த கள்ளிமேடு வீதியை சேர்ந்தவர் பொன்மணி (57). வீட்டோடு இணைத்து ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவர், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கடையை அடைக்கும் முன் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

அந்த மர்ம நபர், பொருட்கள் வாங்குவது போல வந்து பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் தங்க நகை பறித்து தப்பி சென்றார். பொன்மணி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தப்ப முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் பீளமேடு பகுதியை சேர்ந்த அர்ஜுன் (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பீளமேடு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்,

இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...