திருப்பூர் மருத்துவமனை தேவைகள் குறித்து துணை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் அரசு மருத்துவமனைக்கான தேவைகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக தொழில் துறையினர், தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்படி, துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில், ஆலோசனை கூட்டம் பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தொழில் துறையினர், தன்னார்வலர்கள், அரசு மருத்துவர்கள், மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அரசு மருத்துவர்கள் மருத்துவமனையின் தேவைகள், பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தினர். இதை கேட்டறிந்த துணை ஆட்சியர், தன்னார்வலர்கள், தொழில் துறையினருடன் இது குறித்து ஆலோசித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தேவைப்படும் 'ப்ரீசர் பாக்ஸ்'க்காக பத்து லட்சம் ரூபாய் வழங்க, கோடங்கிபாளையம் மற்றும் 63 வேலம்பாளையம் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முன்வந்தனர். 

இதேபோல், மருத்துவமனையின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற கறிக்கோழி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் தீர்மானித்தனர்.



இந்த நிகழ்வில் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கல்குவாரி உரிமையாளர்கள் சிவகுமார் சோமசுந்தரம் ஜவுளி உற்பத்தியாளர் முருகன், கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சுவாதி கண்ணன் மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் சுந்தரராஜ் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...