துடியலூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா!

துடியலூர் அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி ஸ்ரீகணபதி நகரிலுள்ள மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மன் அழைத்தலில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: துடியலூரில் மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி, ஸ்ரீ கணபதி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 



இதில் நேற்று இரவு அம்மன் அழைத்தல், விகேவி நகர் சுக்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மதுரை வீரன் குதிரை வாகனத்திலும், சக்திக் கரகம் சாமி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.



இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...