கோவை தெற்கு எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உடலில் ஓம் சிவா என்ற பச்சை உள்ளது!

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் 2 நாட்களுக்கு முன்பு புகுந்த மர்ம நபர் உள்பக்கமாக பூட்ட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் வெளியில் அனுப்பியை நிலையில், அவர் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், தனது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் புகுந்து உட்புறமாக பூட்ட முயன்றார். 



அவரை எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜயன் என்பவர் அடித்து விரட்டினார். 



அதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அண்ணா சிலை ஜி.டி.மியுசியம் அருகே அந்த நபர், அரசு பேருந்தின் பின்சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்தது, தற்கொலை செய்து கொள்வது போன்ற சிசிடிவி காட்சிகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றபட்டது.

இதனிடையே அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் யார் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருந்தார். 



இந்நிலையில் இறந்த நபரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர் தனது நெஞ்சில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் மலையாளத்தில் பேசினார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்து பந்தயசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...