தொழில்துறையின் மானிய கடன் வழங்கக்கோரி நரிக்குறவர் சமூகத்தினர் மனு!

பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் நரிக்குறவர் சமுதாய பெண்கள் தங்களது தொழிலான ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: தொழில்துறையின் மானிய கடன் வழங்க வலியுறுத்தி ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பல்லடம் தாலுகா ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குறவர் காலனியில் 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஊசி, பாசி மாலை, மணி ஆகியவை தயார் செய்து வெவ்வேறு பகுதிகளுக்கு நடந்தும், வாகனங்களிலும் சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் தங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...