கோவை சுந்தராபுரத்தில் 10 வயதுடைய சந்தனமரம் வெட்டி கடத்தல்!

சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவர் தனது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்த சந்தன மரத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் பகுதியில் வீட்டு வளாகத்தில் இருந்த 10 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவரது மகன் அனந்த பத்மநாதன் (45). இவர் ஐடி நிறுவனங்களுக்கு வன்பொருள் சப்ளை செய்யும் பணியை செய்து வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் தானாக வளர்த்த சுமார் 10 ஆண்டுகளான சந்தன மரத்தை பராமரித்து வந்தார்.



நேற்று இரவு 12 மணி வரை சந்தனமரம் இருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வழக்கம் போல எழுந்து பார்த்த போது, சந்தனமரம் வெட்டப்பட்டு அதன் நடுபகுதியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.



இதையடுத்து அனந்த பத்மநாதன் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் சந்தனமரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...