உடுமலையில் மூளை நோயால் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான விக்னேஷ் (32) என்பவருக்கு திடீரென மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் சென்னையில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

இதனிடையே விக்னேஷுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது உடல் உறுப்புகள் மருத்துவர்கள் மூலமாக தானமாக பெறப்பட்டது. 

உயிரிழந்த விக்னேஷ் கால்பந்தாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறந்த பின்பும் உடல் உறுப்புகள் மூலமாக பலருக்கு வாழ்க்கை அளித்த சம்பவம் உடுமலை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...