துடியலூரில் முறையான குடிநீர் வழங்க கோரிக்கை - ஊராட்சி அலுவலகம் முற்றுகை!

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல்காந்தி நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓரிரு நாளில் குடிநீர் விநியோக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கோவை: துடியலூர் அடுத்த குருடம்பாளையம் அருகே முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல் காந்தி நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் சண்முகம் அப்பகுதியில் கால்வாய் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும் என தெரிவித்ததைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...