ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன் தலைமை வகித்தார். 



இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் பேசியதாவது, 2023- 24 ஆம் கல்வியாண்டில் அரசின் நலத்திட்டங்களான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை ஆகியவை பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் இந்த ஆண்டு முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டனர். பள்ளி செல்லா குழந்தைகள் யாரேனும் நமது கிராமத்தில் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிறைவாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...