ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுகிறது - ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு

தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு விடப்படுவதால் பல குற்ற சம்பவங்கள் நடப்பதோடு வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.



திருப்பூர்: சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆல்ட்ராக் ஓட்டுநர் உரிமையாளர் நலச் சங்கத்தின் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த போக்கு அதிக அளவில் உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு கொடுப்பதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.

இதனால் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாவிட்டால், வாடகை வாகனங்களாக பதிவு செய்யப்பட்டதை சொந்த வாகனங்களாக மாற்றி கொடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...