தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு - பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது!

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் வழக்கம் போல மண்வெட்டியை எடுக்க வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார்.



அப்போது அங்கே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கோவை சரக வனத்துறையினர் கொட்டகையில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை பரிசோதனை செய்து பின்னர் மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது கெம்பனூர் பகுதி வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கிருந்து, இந்த மலைப்பாம்பு வந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...