கோவையில் எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்!

கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியில் இருந்து எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2 நாட்களில் இப்பணிகள் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் மாணவர்களின் கற்றல் திறன், வாசித்தல் திறன் மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளது. நாள்தோறும் மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் போன்ற பயிற்சிகளும் இதிலிருந்து வழங்கப்படுகிறது.



இந்நிலையில் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியிலிருந்து எண்ணும்- எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...