கோவை பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு!

குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் செயினை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்


கோவை: குனியமுத்தூர் அருகேயுள்ள பி.கே.புதூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி பிரேமா கடந்த ஜூலை 4ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது குளத்துப்பாளையம் சாலை பாலு கார்டன் அருகே வந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

அப்போது பிரேமா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் அரை சவரன் எடை கொண்ட செயினில் ஒரு பகுதியை பிடுங்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து பிரேமா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...