குனியமுத்தூர் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய வாகனம் - போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய பெண் உயிரிழந்த சோகம்!

கோவை குனியமுத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்ற ஓய்வு பெற்ற மின்சார துறை பெண் ஊழியர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு செல்லும்போது முன்னால் சென்ற வாகனம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், போக்குவரத்து பாதிப்பால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.


கோவை: குனியமுத்தூர் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிய வாகனத்தால், மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல், ஓய்வு பெற்ற பெண் மின் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை குனியமுத்தூர் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற நாகம்மாள் (70). ஓய்வு பெற்ற மின் ஊழியரான இவர், கணவர் இறந்த நிலையில், தனது மகன் ராஜபாண்டியன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நாகம்மாள் வீட்டில் இருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜபாண்டியன் தனது காரில் நாகம்மாளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார்.

அப்போது சக்திநகர் சாலையில் சென்ற போது அவர்களுக்கு முன்னால் வேன் ஒன்று சென்றது. மழை பெய்து கொண்டிருந்ததால், திடீரென முன்னால் சென்ற வேன் சாலையில் இருந்த குழியில் இறங்கி சிக்கியது.

இதனால் எந்த வாகனமும் செல்ல முடியாததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைவரும் சேர்ந்து நீண்ட நேரம் வேனை சாலை ஓரத்தில் தள்ள முயன்றனர்.

ஆனாலும் முடியாத நிலையில் ஒரு மணி நேரம் கழித்து பொக்லைன் மூலம் வேன் அகற்றப்பட்டு, அவசர அவசரமாக நாகம்மாளை ராஜபாண்டியன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் நாகம்மாள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் கதறியழுத ராஜபாண்டியன் போலீஸாருக்கு தகவல் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நாகம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோசமான சாலையால் ஓய்வு பெற்ற பெண் மின் ஊழியர் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...