கனிமவள கொள்ளையை தடுக்க கோரி PEOPLE OF COIMBATORE அமைப்பு ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கனிமவள கொள்ளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி PEOPLE OF COIMBATORE அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கனிமவள கொள்ளையை தடுக்க கோரி PEOPLE OF COIMBATORE அமைப்பு ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் என பலரும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில் கனிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் PEOPLE OF COIMBATORE அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது, சுய நலனுக்காக கனிம வளங்களை வெட்டி எடுப்பதை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். கல்குவாரியில் பயன்படுத்தும் வெடி மருந்துகளால் கற்பாறைகள் விவசாய நிலத்தில் விழுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் கனிம வளத்தை எடுக்கும் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், இரவு நேரங்களில் செயல்படும் குவாரிகளின் உரிமைக்கு ரத்து செய்ய வேண்டும்.

கனிமவள கடத்தலுக்கு துணை போகும் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். போலி அனுமதி சீட்டு பயன்படுத்தும் உரிமையாளர்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்.

கனிமவள கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை தடுத்து நிறுத்தும் கிராமமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது. மனித விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிர் பிரிந்தால் 50 லட்சம் பிறப்பீடு தர வேண்டும்.

இவ்வாறான பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...