திருப்பூரில் நியாயவிலை கடையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் - ஆட்சியர் துவக்கி வைப்பு!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாத துவக்கத்திலிருந்தே பருவமழை துவங்கிவிட்டது. இதனால், போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளியின் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே ரூபாய் 130 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில், பொது மக்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக தக்காளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சாலை பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஒரு கடையில் ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் 50 பேருக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வரும் நாட்களில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...