கோவையில் புதுமண தம்பதிக்கு சின்ன வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்!

கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிக்கு, அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம், மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக அளித்துள்ளனர்.



கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹாலில் கணேஷ் -ஹேமா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...