ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிராக போராட சென்ற நந்தினி மற்றும் தீக்ஷனா கைது!

ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதற்காக சென்ற நந்தினி மற்றும் தீக்ஷனாவை சூலூர் போலீசார் பேருந்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட சென்ற நந்தினி மற்றும் தீக்‌ஷனாவை போலீசார் பேருந்தில் வைத்து கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக போராளியான நந்தினி மற்றும் தீக்ஷனா ஆகியோர் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்த மதுரையிலிருந்து கோவை வரை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், சூலூர் போலீசார் பேருந்தில் பயணம் செய்த இருவரையும் தடுத்து நிறுத்தி கைது கைது செய்துள்ளனர்.

பின்னர் இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இருவரையும் கைது செய்வதற்காக போலீசார் அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...