தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் நுழைந்து விடக்கூடாது என திமுக அரசு இடையூறுகளை செய்து வருகிறது - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நுழைந்து விடக்கூடாது என திமுக அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது என்றும், நடிகர் ஜோசப் விஜய்யின் இரவு நேர பாடசாலை திட்டம் வரவேற்கத்தக்கது எனவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.



திருப்பூர்: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நுழைந்து விடக்கூடாது என திமுக அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையம் மாதேஸ்வரன் நகரில் இந்து மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



தமிழ்நாட்டில் சட்டபூர்வ அமைப்பான பிரதமர் முதல் முதலமைச்சர்கள் வரை உறுப்பினர்களாக உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நுழைந்து விடக்கூடாது என்று எண்ணி பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. இதனை தாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.

அதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் மோகன் பகவத் கலந்து கொண்ட தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு எதிராக மாவட்ட கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அர்ஜுன் சம்பத் பதிலளித்தாவது, தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காரணம் காட்டி தமிழக அரசு இடையூறு ஏற்படுத்த முயன்று வருகிறது. அப்பள்ளியை சீல் வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிய வருகிறது. இதனை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன் சம்பத், இந்தியாவிற்குள் பர்மா எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினரிடையே சாதிமார்களை கிறிஸ்தவ பாதிரிமார்கள் மாவோஈஸ்டுகளிடம் ஆயுதங்களை கொடுத்து கலவரத்தை தூண்டி விட்டு வருகிறார்கள்.விரைவில் மணிப்பூர் மாநில கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் இரவு நேர பாடசாலை திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் ஜோசப் விஜய் நிறைய சம்பாதித்து வைத்துள்ளார். அவற்றை ரசிகர்கள் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை உணவு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

ஜோசப் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல் நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் சம்பாதித்த பணத்தை சமூக சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். நடிகர் ஜோசப் விஜய்யின் ரசிகர்கள் மதுவிற்கு எதிராக போராட முன் வர வேண்டும். ரசிகர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட நடிகர் ஜோசப் விஜய் அறிவுரை கூற வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜாவிற்கு தனது வீட்டிற்கு வந்தால் மாட்டுக்கறி உணவு கொடுப்பதாக கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

இதேபோல் அவரது கட்சியில் உள்ள இஸ்லாமியர்களை வீட்டிற்கு அழைத்து பன்றி கறி போட சீமானால் சொல்ல முடியுமா சொல்லிவிட்டு அரசியல் களத்தில் நிற்க முடியுமா என்றும் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பினார்.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற வாசகத்திற்கு ஏற்ப மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்கும் வகையில் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மோடியின் கட்சியோ அல்லது கூட்டணி வைத்துள்ள கட்சியோ 40 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணி வெற்றி பெற இந்து மக்கள் கட்சி பாடுபடும்.

தமிழகத்தின் மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளது போல 7 மணி முதல் நவீன பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்யப்படுவதாக கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பெரும்பாலான மது உற்பத்தி தொழிற்சாலைகள் திமுகவினர் வசம் உள்ளது.

தமிழ்நாட்டை மது குடிக்கும் நாடாக மாற்றுவது தான் திராவிட மாடல், இவர்களைப் போன்ற மக்கள் விரோதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல் தடுப்பது தான் எங்களது தலையாய பணி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...