மணிப்பூர் கலவரம் - முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பெண்கள் இருவரை ஆண்கள் சிலர் நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத அம்மாநில முதலமைச்சர் பதவி விலக கோரி கோவை மருதமலையில் உள்ள சட்டக்கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் இட ஒதுக்கீடு சம்பந்தமாக இருபிரிவு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கலவரத்தில், பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாஜக அரசு தான் என கூறி அங்குள்ள பல்வேறு பாஜகவினரின் இல்லங்களும் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் இரண்டு மணிப்பூர் பெண்களை ஆண்கள் வலுகட்டாயமாக நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து சென்ற வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்கிட வேண்டும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தவறிய முதலமைச்சர் பிரேன்சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உடனடியாக மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் பெண்கள் வழியாக்கப்படுவதை தடுத்து நிறுத்திட பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்தும் அவர்களது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...