பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் - தபெதிக அறிவிப்பு!

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து கோவையில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பேசியதாவது,



இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜகவும், பிரதமராக இருக்கின்ற மோடியும் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக தேர்தலை கணக்கிட்டு அமைதியாக இருந்த மணிப்பூரில் இரண்டு இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்த்தில் கூட நடக்காத அளவிற்கு இந்த செயல்பாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஒரு தொகுதி வாக்கு வங்கிற்காக ஏற்பட்ட கலவரம், தற்போது 500க்கும் மேற்பட்ட பாராளுமன்ற தொகுதி பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

மணிப்பூர் கலவர செய்தியை மறைப்பதற்கு தான் தமிழ்நாட்டிலே மத்திய அரசு பல்வேறு திசை திருப்பும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டது. தமிழகத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த கலவர நிலையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையிலும், பாஜகவை கண்டித்தும் அனைத்து கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த உள்ளோம், அந்த வகையில் வரும் நான்கு நாட்களில் மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...