கோவையில் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை கெம்பட்டி காலனிக்கு உட்பட்ட ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிர் யாரும் விடுபட்டு விட கூடாது என முதலமைச்சர் கூறியிருந்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன், மண்டல குழு தலைவர் மீனாலோகு ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...