கோவையில் வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவர் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை அப்பநாயக்கன்பாளையம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் பக்கத்து வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஸ்ரீனிவாசன் என்பவரை தாக்கிய கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


கோவை: அப்பநாயக்கன்பாளையம் அருகே வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அப்பநாயக்கன்பாளையத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் ஸ்ரீனிவாசன், ஓட்டுனராக உள்ள இவரது வீட்டருகே குடியிருந்து வருபவர் கர்ணா மற்றும் கிஷோர். இவர்கள் இருவருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டருகே நின்று கொண்டிருந்த ஸ்ரீனிவாசனிடம் கர்ணா மற்றும் கிஷோர் அவர்களது நண்பர்களான வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது கைலப்பாக மாறி 4 பேரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஸ்ரீனிவாசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீனிவாசன் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...