ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்!

தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றிய மதிமுக சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூரில் மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பொறுப்பில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், 1 கோடி கையெழுத்து இயக்கம் மூலனூர் ஒன்றிய அவை தலைவர் மாரிசாமி தலைமையில் நடைபெற்றது.



கையெழுத்து நிகழ்ச்சியை, மூலனூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி முன்நின்று துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் தமிழரசு, மதிமுக மூலனூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ரத்தினசாமி, பேரூர் கழக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மதிமுக கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...