வால்பாறை அருகே நீர்தேக்க தொட்டியில் கடமான் விழுந்து பலி!

அக்காமலை பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடமானின் உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்து உடலை புதைத்தனர். மேலும் மற்ற விலங்குகள் துரத்தியதால், கடமான் தவறி விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதியில் நீர்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை பகுதியில் நீர்தேக்க தொட்டி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கருமலை எஸ்டேட் பகுதியில் நீர் தேக்கப்பட்டு குடிநீராக வால்பாறை பகுதிக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தண்ணிரில் விழுந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாக 12 வார்டு உறுப்பினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது,

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் நீர்தேக்க தொட்டி அருகே சென்று பார்த்தபோது கடமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. மேலும் வால்பாறை நகராட்சி பொறியாளர் தலைமையில்.



தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தீ அணைப்பு துறையினர் தண்ணீரில் சென்று கடமானின் உடலில் கயிறு கட்டி தண்ணீரில் இருந்து உடலை மீட்டனர்.

வனப்பகுதி அருகே செந்நாய் மற்றும் சிறுத்தைகள் கட மானை வேட்டையாட துரத்திச் செல்லும் பொழுது தண்ணீரில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் கட மானின் வயது 5 இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த கடமானை உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...