இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

வீரபாண்டி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜனின் ஓட்டுனர் எனக்கூறி இலவச வீட்டு மனை பட்டா பெற்று தருவதாக கூறி சுமார் 14 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: இலவச வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக கூறி 14 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வீரபாண்டி பகுதி சேர்ந்த சங்கர் என்பவர், தான் பல்லடம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜனிடம் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் தனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவதற்கு நபர் ஒன்றுக்கு 30,000 கொடுத்தால் உடனடியாக வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சுண்ட மேடு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்த போது, சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறுக சிறுக பணத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறு கடந்த ஆறு மாதத்தில் சுமார் 14 லட்சம் ரூபாய் வசூல் செய்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சங்கர் பணம் கொடுத்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை.



இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி 14 லட்சம் வரை ஏமாற்றிய சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...