பல்லடம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டு கூலி தொழிலாளியிடம் டாஸ்மாக் விற்பனையாளர் வாக்குவாதம் - பரபரப்பு

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த கூலி தொழிலாளியிடம் விற்பனையாளர் குவாட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 தர வலியுறுத்தியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கூலித் தொழிலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பல்லடம் அருகேயுள்ள செட்டிபாளையம் சாலையில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் செயல்பட்டு வரும் கடையை மூடக்கோரி வரும் 8 ஆம் தேதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்த பகுதியில் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க வந்த கூலித்தொழிலாளியிடம் விற்பனையாளர் குவாட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளார்.



அதற்கு தொழிலாளி பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சரே பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என கேட்டார். அதற்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர் கூறும் போது அமைச்சர் சொன்னது அடுத்த மாதத்தில் இருந்து தான் வாங்க கூடாது என கூறியிருப்பதாக கூறி கொடுத்த குவாட்டர் பாட்டிலை வாங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் தொழிலாளி வாக்குவாதத்தில் ஈடுபடவே ஒரு கட்டத்தில் விற்பனையாளர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து பேசிய வாடிக்கையாளர் அமைச்சரே கூலித்தொழிலாளியின் உடம்பு வலிக்கு குடிப்பதாக கூறியிருப்பதாக ஆறுதல் வார்த்தை கூறியிருக்கும் நிலையில், டாஸ்மாக் ஊழியர் அடாவடியாக நடந்துகொள்வதாக வேதனை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...