மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்தியகிரக போராட்டம்!

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்திய கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஓன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், மேடையின் முன்பு உப்பு பாக்கெட்டுகள் வைக்கபட்டிருந்தன. இந்த போராட்டத்திற்கு பிறகு மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மணிப்பூர் கலவரம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முழு பொறுப்பு ஒன்றிய அரசு தான். இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் மற்றும் தமிழக முதல்வர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்துறை கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வில், முன்னாள் பாடநூல் வாரிய தலைவர் லியாக்த் அலிகான், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், உடுமலை நகர அமைப்பாளர் சக்திவேல், வழக்கறிஞர் பெரியார்தாசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...