சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு – திருப்பூர் மாவட்டத்தில் 766 வழக்குகளுக்கு தீர்வு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடந்தது. இதில் 2387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 766 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



திருப்பூர்: மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு ஏழு அமர்வுகளாக நடைபெற்றது.

மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, குடும்ப நல வழக்கு, சமரசத்துக்குரிய குற்ற வழக்கு,காசோலை மோசடி, வங்கி வாராக்கடன் வழக்கு என பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு மொத்தம் 7 அமர்வுகளாக நடந்தது.

திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் முன்னிலையில் நடந்தது. இதில் 2387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 766 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மொத்த மதிப்பு ரூ. 28 கோடியே 51 லட்சத்து 60 ஆயிரத்து 936 ஆகும். மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 248-க்கு ரூ. 20 கோடியே 89 லட்சத்து 51 ஆயிரத்து 521 மதிப்பிலும், 68 சிவில் வழக்குகளுக்கு ரூ. 6 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 141-ம் என, 7 குடும்ப நல வழக்குகளுக்கு ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம், சமரசத்துக்கு உரிய குற்ற வழக்குகள் 415-க்கு ரூ. 16 லட்சத்து 39 ஆயிரத்து 700, 13 காசோலை மோசடி வழக்குகளின் மதிப்பு ரூ. 50 லட்சத்து 95 ஆயிரம், 15 வங்கி வராக்கடனின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சத்து 5 ஆயிரத்து 574 என பல்வேறு வழக்குகளுக்கு சமரசத்தீர்வு எட்டப்பட்டது.

நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன், நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்கறிஞர்கள் பழனிசாமி மற்றும் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...