கட்டுப்பாட்டை இழந்து வாரச்சந்தைக்குள் புகுந்த கார் – மூதாட்டி உட்பட மூன்று பேர் கவலைக்கிடம்..!

கோவை வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது ஞாயிற்றுக்கிழமை வாரசந்தைக்குள் புகுந்ததால், காய்கறி வியாபாரத்திற்கு வந்த மூதாட்டி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தைக்குள் கார் புகுந்து மூன்று பேர் படுகாயமடைந்தது பற்றி வழக்குப்பதிவு செய்த வடவள்ளி போலீசார், ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.



இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல சந்தை போடப்பட்டு பொதுமக்கள் வரத்துவங்கிய நிலையில் அவ்வழியாக மருதமலை நோக்கிச் சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் போடப்பட்ட காய்கறி கடைக்குள் புகுந்தது.

இதில் அங்கிருந்த மூதாட்டி மற்றும் வட மாநில தொழிலாளர்கள் என மூன்று பேர் காயமடைந்தனர்.



இதைடுத்து அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை சந்தையில் 6 மணிக்கு மேல் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் சந்தைகளுக்கு வருவது வழக்கம். முன்னதாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரான வடவள்ளியை சேர்ந்த கனிராஜ் (57) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...