சுதந்திர தினம் கொண்டாட்டம் - தனியார் பள்ளி மாணவர்கள் பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா பேரணியை மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலைக்கோவில் என்ற தனியார் பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து, மாணவ மாணவியர் மூலனூர் அரசு மருத்துவமனை முன்பு துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வடுகபட்டி பிரிவு அண்ணா நகர் வழியாக பேரணி பள்ளி வளாகம் முன்பு நிறைவடைந்தது.



பள்ளியின் தாளாளர் சுந்தரம் தலைமையில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின பேரணியை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெஞ்சன், நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...