அரசு அறிவித்த ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - போராட்டத்தில் குதித்த டேன் டீ தொழிலாளர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தபடி ஒரு நாள் ஊதியமான 425 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று வால்பாறை அருகே டேன் டீ தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஊதிய பற்றாக்குறை மற்றும் வனவிலங்கு பிரச்சனையால் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. இதில் சின்கோனா,சின்னக்கல்லார், பெரியகல்லார், நீரார், உபாசி,ரயான், ஆகிய எஸ்டேட்டுகள் அரசு தேயிலைத் தோட்ட நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதை அரசு இரண்டு ஆண்டுக்கு முன்பு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சராசரி ஒரு நாள் ஊதியமாக 425 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட்டது. தற்போது தனியார் எஸ்டேட் நிறுவனங்களில் இந்த 425 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம் பற்ற குறை, வனவிலங்கு பிரச்சனை அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறோம். அரசு அறிவித்த 425 ரூபாய் சம்பளத்தை டேன் டீ நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.



இதனிடையே, வால்பாறை அருகே உள்ள ஊபாசி எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் அலுவலகத்திற்கு முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...