பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு கோவையில் மட்டும் 12.65 லட்சம் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்க இலக்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



கோவை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 24ஆம் தேதி மாத்திரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்றைய தினம் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும், 24 ம் தேதி மருந்து வழங்கப்படும். 1 வயது முதல், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 20 – 30 வரையிலான பெண்களுக்கு, குடல்புழு நீக்க மருந்து(அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.



கோவை மாவட்ட சுகாதார துறை சார்பில், கோவை, மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்குப் பின் குடற்புழு நீக்க மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்ட சுகாதார பணி அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள, 985 தனியார், 1,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,697 அங்கன்வாடி மையங்கள், 150 கல்லுாரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் மூலம் மாத்திரை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 24 ம் தேதி வழங்கப்படும். மாவட்டத்தில், 12.65 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...