வால்பாறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்!

வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் உலா வந்த சிறுத்தையால், பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் சிறுத்தை, காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி, போன்றவை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனை அருகே இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வளாக பகுதியில் சிறுத்தை ஒன்று சென்றுள்ளது. இது, அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,

சுமார் ஒன்பது மணி அளவில் மருத்துவமனையில் இருந்து செவிலியர், மருத்துவர் வரும் பொழுதும், இரண்டு சக்கர வாகனம் வரும் பொழுதும் சிறுத்தை நடமாடியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை உடனடியாக வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...