நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 78வது நினைவு நாள் - இரத்ததான கழகம் சார்பில் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ன் 78 வது நினைவு நாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரத்ததான கழகம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



கோவை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை ஒட்டி கோவையில் ரத்ததான கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளையொட்டி நாடு முழுவதும் அவரது திரூஉருவச் சிலைகளுக்கு பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளை ஒட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகம் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கி சுபாஸ் சந்திரபோஸ் வீரவரலாறு குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து நேதாஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் அருகில் இருந்த மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கும் மாலைகள் சூடி மரியாதை செய்தனர்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அகில் சந்திரசேகர், பேங்க் முருகேசன், துரை செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ஜெனார்த்தனன், ரேகா, கூடலூர் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா, பள்ளி கல்விக்குழுவை சேர்ந்த பொன் மாடசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகத்தை சேர்ந்த கே.ஆர்.செல்வம், கே.ராஜகோபால், பி.முத்துராஜா, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நண்பர்கள் நற்பணி மன்ற செயலாளர் ஆனந்தபாபு, படையப்பா மற்றும் ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...