வால்பாறையில் பெண் தொழிலாளியை கடித்து புரண்ட கரடி - படுகாயமடைந்த பெண் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி ஒன்று வேலைக்கு சென்ற பெண் தொழிலாளியை கடித்து புரண்டுள்ளது. இதில் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கமலம் என்ற பெண் தொழிலாளி இன்று காலையில் தேயிலை பறிப்பதற்காக தேயிலை தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக பதுங்கியிருந்த கரடி அவரை தாக்கியது சக தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாடர்பால்ஷ் எஸ்டேட் 3 வது டிவிசன் பகுதியில் குடியிருந்து வருபவர் கமலம் வயது 59. இன்று காலை தேயிலை தோட்ட வேலைக்கு சென்று உள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி தொழிலாளியை தாக்கியது. இதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. முதல் உதவி சிகிச்சைக்காக எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.



பின்னர், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்று உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...