சந்திரயானை சுமக்கும் விநாயகர் - கோவை நகை வடிவமைப்பாளர் அசத்தல்

சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளதை முன்னிட்டு விநாயகர் சந்திரயான் விண்கலத்தை தாங்கி நிற்பது போன்று கோவையைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா வடிவமைத்துள்ளது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை: தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளநிலையில், களிமண்ணை கொண்டு வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் விண்கலத்தின் கடைசி வெற்றி நொடிகளை பார்க்க இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் காத்திருக்கிறது.இதனிடையே கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்து அசத்தியுள்ளார்.

களிமண்ணை கொண்டு விநாயகரை வடிவமைத்த அவர், சந்திரயான் விண்கலத்துடன் நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரையும், நிலவையும் தாங்கி பிடித்தவாறு வடிவமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியும் அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்திராயன் சதுர்த்தி என்ற தலைப்பில் இதனை வடிவமைத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...