கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - ரேசன் கடை பணியாளர்களின் பணியாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் மனு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயன்கள் செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பதிவுகள் கோவை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன.

இந்நிலையில் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...