ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி காட்டிய அனைத்து முற்போக்கு அமைப்பினர் கைது

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இவருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து முற்போக்கு அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: தமிழக சட்டமன்றத்தையும், தமிழ மக்களின் உணர்வுளையும் மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து, சாலை மார்க்கமாக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து லாலி ரோடு வழியாக பாரதியார் பல்கலைக்கழகம் செல்கிறார்.

இந்நிலையில் லாலி ரோடு பகுதியில் அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாக புகார் கூறி இந்த கருப்புக்கொடி போராட்டம் நடைபெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...