அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு - கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


கோவை: அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புரட்சித்தமிழர் எடப்பாடியார் வாழ்க என்று அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கழகம் துடியலூர் பகுதி சார்பாக கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதில் பகுதி செயலாளர் வணிதா மணி, அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலாளர் சாந்தி பூசன், பந்தல் வீடு பிரகாஷ், சுரேஷ் பாபு, வெள்ளகிணர் காளிச்சாமி, அண்ணா தொழில்சங்கம் பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேசன், கட்சி நிர்வாகிகள் மோகன்ராஜ், சி.டி.சி.செல்வம், சுசீலா, அண்ணா ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் பாபு என்கிற ரங்கசாமி, வேல்முருகன், திரு, கெளதம், சுதாகர் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு துடியலூர் பேருந்து நிறுத்தும் அருகே பட்டாசு வெடித்தனர்.



அப்போது அவர்கள் புரட்சித்தமிழர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...