பணி நிரந்தரம் செய்க… - பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழக அரசு ஓரிரு நாட்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.



பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இச்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் 12,200 ரூபாய் நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகவும், வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் 10,000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருவதாக கூறினர். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும், என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் தங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் கூறினர்.

எனவே தமிழக அரசு ஓரிரு நாட்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...