அரசாணை 293 அமல்படுத்த வேண்டும் - கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் அரசாணை 293 அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வு தமிழக அரசு வழங்க வேண்டியும் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.



கோவை அரசு மருத்துவமனையில் அரசாணை 293 அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வு தமிழக அரசு வழங்க வேண்டியும் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த உள்ளிருப்பு போராட்டமானது தமிழகம் முழுவதும் நடைபெற்ற வருகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரவிசங்கர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளின் என தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அரசாணை 293 தமிழக அரசால் வெளியீட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் அமல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

வருகின்ற மாதத்தில் சம்பளத்துடன் சேர்ந்து உரிய ஊக்கத்தொகையும், ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.. அரசாணை அமல்படுத்தும் வரை இந்த உள்ளிருப்பு போராட்டமானது தொடரும் என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு எந்த விதமான இடையூர் இல்லாதவாறு இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...